none

 

தேவையில்லா தருணங்களில்….
தேவையில்லா விசயங்களில்….
தப்பித் தவறியும் நுழையாதே….

ஏனென்றால்…
அவ்விடத்தில் உடைவது உன் மூக்கு மட்டுமல்ல…..
தன்மானம் எனும்
உனது பலமும்….!!!!

ஆயிரம் கருத்துக்கள் உள்ளிருப்பினும்…..
மூடிக் கொண்டு அமைதியாகத் தான்
இருக்கிறது புத்தகங்கள்…..!!!!!

நேர்மையானவர்கள் எங்கு சென்றாலும் பிரச்சினை வந்து கொண்டே தான் இருக்கும்….

ஏனெனில்….

அவர்களுக்கு நடிக்கவும் வராது……
நடிப்பவர்களை ஏற்றுக் கொள்ளவும் முடியாது…..!!!!!

நேர்மையுடன் பேசுவதற்கு….
அதிக நேரமும் தேவைப்படுவதில்லை…..!!!!!!

யாரையும் காயப்படுத்தவோ, குறைத்து நடத்தவோ செய்யாதீர்கள்…..
இன்று நீங்கள் பலம் மிக்கவராக இருக்கலாம்…..
ஆனால்…
நினைவில் கொள்ளுங்கள்…
காலம் உங்களைக் காட்டிலும் பலம் வாய்ந்தது….!!!!!

யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு…..
அது தெரியாத வரை அனைவரும் நல்லவர்களே…….!!!!!!

வாழ்க்கையில் ….
கிடைப்பதை அனுபவியுங்கள்…….
கிடைக்காததை ரசியுங்கள்…..
இழந்ததை உணருங்கள்…..
பிடித்ததை விரும்புங்கள்…..
பழைய நினைவுகளை நினைத்து மகிழுங்கள்…..
வாழ்க்கை இனிக்கும்….!!!!!

ஒரு மனிதனின் உள்ளம் எப்படியோ….
அப்படியே அவனது தீர்ப்புகளும் இருக்கும்…,..!!!!!

ஒரு நாளைக்கு ஒரு முறை உங்களுடன் பேசுங்கள்…….
இல்லையெனில், இந்த உலகில் ஒரு சிறந்த நபரை சந்திப்பதை நீங்கள் இழக்க நேரிடும்….!!!!

அன்பான நற்காலை 🙏 வணக்கம்.
வாழ்க வளமுடன்.
எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்.

Spread the love